உத்தம தாயே!












பெத்தெடுத்து பேர் கொடுத்து

உணவளித்து ஊட்டி வளர்த்து

அறிவெனக்குஅள்ளிக்கொடுத்து

ஆசைகாட்டி பாசமூட்டி

அன்பு கொடுத்து அரவணைத்து

நெஞ்சு மகிழ எமையெல்லாம்

வஞ்சமின்றி காத்தேடுத்து

சஞ்சலங்கள் ஏதுமின்றி

சரித்திரமாகிவிட்ட என் தாயே!

என்றென்றும் வாழியவே!

""""""""""""""""""""""""""""

அனைத்துலக அன்னையர் தினத்தில்

அனைத்து அன்னையர்களுக்கும்

உண்மையின் அன்னையர்தின

/////நல்வாழ்த்துக்கள்/////

\சிநேக்ச்ன்/.

ஒசாமா பின் லாடன் படம்




சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாமல் சில இணையத்தளங்களில் வெளியாகி உள்ளது ஒசாமா பின்லாடனின் இறந்த புகைப்படம். அனாலும் பலர் இது அவரின் புகைப்படம் தான் என எதிர்வு கூறியுள்ளனர். இருப்பினும் அமேரிக்கா இதை வெளியிடப்போவது இல்லை என்று தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் இன்னும் இருவரின் படங்களும் வெளிவந்துள்ளது. அவர்கள் இருவரும் யார் என்பது வெளிவர வில்லை. இவர்கள் அவரின் இயக்க உறுப்பினர்கள் என சிலர் நம்புகின்றனர்.

மே 3 சர்வதேச சுதந்திர உடகவியலாளர் தினம்

உலக வரலாற்றில் சமாதானத்திக்காகவும் உண்மை செய்தியை உலகறிய செய்யவேண்டும் என்பதற்காகவும் உழைத்த நடுநிலையான செய்தியாளர்கள் பலரை இந்த உலகம் இழந்துள்ளது. அவர்கள் அனைவருக்காகவும் ஒருமுறை நாம் அனைவரும் பிரார்த்திப்போம்
1991 ம ஆண்டு மே 3 ல் ஆபிரிக்க பத்திரிக்கையாளர்களால் கூட்டாக பத்திரிக்கையாளர் சாசனம் வெளியிடப்பட்டது . அதன் பின்பு 1993 மே மூன்றாம் திகதியை சுதந்திர ஊடகவியலாளர் தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டு ஆண்டுதோறும் மே மூன்றாம் திகதி அனைத்துலக சுதந்திர ஊடகவியலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையான ஊடகவியலாளருக்கு சுதந்திரமாக செயல்ப்பட முடிகிறதா?

தொழிலாளர்கள் வாழவேண்டும்.



கொடுமைகளும், கோரங்களும் நிறைந்த ஒரு உணர்ச்சி போராட்டம் பல உயிர்களை கொண்றுதின்றபின் கிடைத்த ஒரு சுதந்திரமான வெற்றியே இந்த மேதினம் ஒரு நாளில் எட்டு மணிநேரம் உறக்கம் எட்டுமணிநேரம் வேலை மிகுதி எட்டுமணி நேரம் ஓய்வு என பிரித்தெடுத்து வாழ தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. இதற்க்கு முன்பு ஒரு நாளில் சுமார் இருபது மணிநேரம் தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டார்கள் அல்லது அடிமை தொழிலாளர்களாக பாவிக்கப்பட்டார்கள் என்பது என்றும் நெஞ்சை உறுத்தும் உண்மையே. உலகம் முழுவதும் தொளிலாலர்கலாலையே இயங்கிக்கொண்டு இருக்கிறது. என்றும் இவர்கள் வாழவேண்டும்.

இனிய தமிழ் புதுவருட வாழ்த்துக்கள்

உலககத்தமிளர்கள் அனைவருக்கும் உண்மையின் இனிய தமிழ் புதுவருட வாழ்த்துக்கள். இதுவரைகாலமும் பட்ட துன்பங்கள், துயரங்கள், இருள்வாழ்வு எல்லாம் நீங்கி ஒளிவீசும், இன்பம், இனிமை, சந்தோசம், நின்மதி தரும் வருடமாக இந்த புதிய கரு வருடம் அமையவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.