ஞாபகம் குறைகிறதா


ஞாபகசத்தி வலுப்பெற உட்கொள்ள வேண்டியவை.
அடடா மறந்துவிட்டனே! அப்படி என்று அதிகம் பேர் சொல்வதை கேள்விப்படுவோம், இதெல்லாம் அவர்களின் மூளை மண்டலத்தில் உள்ள செயல்திறனில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளதுதான் இதற்க்கான காரணம். அதற்காக அவர்களின் மூளையில் ஏதோ

கோளாறு என்று பொருள் இல்லை. சரியான நேரத்தில் மூளைக்கு தேவையான சத்துக்கள் சேரவில்லை என்பதுதான் அர்த்தம். ஆக எமக்கு தேவையான சத்துனவுகளை நாம் சரியாக உள்க்கொண்டால் எமது மூளை சரியாக செயல்படும். அவ்வாறு சரியாக செயல்ப்படும் பட்சத்தில் எமக்கு ஞாபக சத்தி அதிகரிக்கும்.

[ பொதுவாக சோக இயல்புகள், கவலைகள், வேதனைகள், இவ்வாறான நேரங்களில் தனிமையில் இருப்பது போன்ற செயல்கள் மூளையை வறண்டுவிட வைக்கிறது. இதன் காரணத்தாலும் நினைவாற்றல் இழக்கப்படுகிறது.]

சரி இனி என்ன சத்துக்கள் ஞாபகசத்திகூட தேவை என்பதயும், அவை எதில் இருந்து கிடைக்கும் என்பதையும் பாப்போம். பழங்களை அதிகமாக உண்டுவந்தால் எல்லா வகையான புத்துனர்ட்சியும் ஏற்ப்படும் என்பது பொதுவிதி. மூளை என்பது குளிர்ச்சியாக இருக்கவேண்டிய ஒண்று. அதிலும் ஞாபகசத்தி அதிகம் பெற குளுட்டோமிக்அமிலம் மற்றும் பொஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை நாம் அதிகம் உணவில் சேர்க்கவேண்டும்.

பழங்களிலே ஞாபகசக்தியை அதிகம் தருவது 'அப்பில்' அடுத்து பேரீச்சை, தோடை, திராட்சை மற்றும் மாதுளம்பழம் ஆகியன. பொதுவாக பழங்கள் அனைத்திலும் முக்கியமான விற்றமின் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

அடுத்து உணவில் அதிகம் கீரை வகைகள் சேர்த்துக்கொள்ளவேண்டும். வல்லாரை எவளவு அதிகம் சேர்க்கிறோம்மோ அவளவு அதிகமாக நினைவாற்றல் பெருகும். புதினாகீரை, கோவா, போஞ்சி, கரட, பீறறுட ,பூடு[வெள்ளைப்பூண்டு], வெங்காயம் போன்றவைகளும் ஞாபக சத்தியை அதிகரிக்கும். மற்றும் , பால், தயிர் வெண்ணை என்பவற்றுடன் கோதுமை, சோளம், பார்லி போன்றவைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அதோடு மூளை சோர்வடைவதை தவிர்ப்பதற்கு சமையலில் கண்டிப்பாக கடுகு, மிளகு பெரியசீரகம்[சோம்பு], சின்னசீரகம்[நச்சீரகம்] என்பன சேர்த்துக்கொள்ளவேண்டும். இவைகளுடன் கராம்பு, கறுவா, ஏலம் என்பவைகளும் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

இரவு சாப்பாட்டின் பின் படுக்கைக்கு முன் பாலுடன் பாதாம் சேர்த்து தினமும் குடித்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.