மகாசிவராத்திரி

சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் இனிய சிவராத்திரி தினத்தில் அனைத்து சைவப்பெருமக்களுக்கும் எமது இனிய சிவராத்திரி தின நல்வாழ்த்துக்கள். அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, எம்வாழ்வில் நாம் செய்த தீய செயல்களின் பாவங்களில் இருந்து விமோசனம் தந்து எம்மை பாவத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்து பத்திவழி நடத்திட இப்புனித தினத்தில் பக்தி சிரத்தையுடன் ஆன்மீக சீலராக சிவனடியில் சேர்ந்திடுவோம். விரதங்களில் கடுமையானதும் கட்டுப்பாடு மிக்கதும், நிறைந்த பலந்தருவதும் இச' சிவராத்திரி விரதமேயாகும். எனவே மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பயபக்த்தியுடனும் விரதமிருந்து எம்பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்று உய்வோமாக.. "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"



'ஓம் நமச்சிவாய வாழ்க'