கரனைக்கிளங்கு பிரட்டல்
தேவையான பொருட்கள்
கரனைக்கிளங்க 250g
தேங்காய்எண்ணை தேவையான அளவு
தேங்காய்ப்பால் 1 கப்
சிறியவெங்காயம் 50g
பச்சைமிளகாய் 2
கடுகு
பெரியசீரகம்
கறிவேப்பிலை
சரக்குகூடு ஒரு பை
கலந்ததூள் 25g
உப்பு
புளி.
செய்முறை
கரனைகிழங்கை தோல்சீவி அரை அங்குல சதுரவடிவில் வெட்டி எடுக்கவும். பின் நன்கு கழுவி பொன்னிறமாக பொரித்து எடுத்து வேறாக வைத்துவிட்டு, வேறொரு வாணலியை[தாச்சி] அடுப்பில் வைத்து சூடான உடன், சிறிது எண்ணை ஊற்றி கொதித்ததும் கடுகைப்போடவும். கடுகு பொரித்துவெடித்ததும் பெரிய சீரகத்தை போடவும் பொரிந்ததும் வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய் போன்றவற்றை போட்டு கிளறவும் வதங்கியதும் பொரித்தெடுத்த கரனைக்கிழங்கை போட்டு பிரட்டவும் பின் உப்பு, கலந்ததூள் என்பவறரைப்போட்டு ஒரு கப் முதல்பால் விட்டு நன்கு கலந்துவிட்டு சிறிதளவு இரண்டாம் பாலில ஒரு கொட்டைப்பாக்களவு புளியை கரைத்து அதையும் ஊற்றி கிளறி கறிவேப்பிலையையும் போட்டு மூடிவிடவும். பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு பின்பு சரக்குக்கூட்டை[இறச்சிச்சரக்கு] நன்கு இடித்து போட்டு கலந்து இறக்கவும் மாமிசப்பிரியர்களையே மயக்கும் கரனைக்கிளங்கு கறி தயார் """""""சாப்பிடலாமா?2010