எல்லாப்புகழும் இறைவனுக்கே

மனிதன் மறந்துவிட்ட உண்மைகளில் இறைவனும் ஒன்று. கடவுள் என்பது உண்மையா, பொய்யா என்பதைவிடவும் நமக்கெல்லாம் மேலே ஒரு சக்தி. இருக்கிறது என்பதே உண்மையாக யாவரும் ஏற்றுக்கொண்ட விடயமாகும். அந்த மேலான சக்தியைத்தான் இறைவனாக பலர் ஏற்றுக்கொள்கின்றனர். மனிதன் நியாயமாகவும் நேர்மையாகவும் பயபக்தியுடன் வாழ இது சாத்தியப்பாடான ஒரு விடயமாகவே தோன்றுகின்றது. எனவேதான் தொன்று தொட்டு மனிதசமுகம் இதை நல்ல ஒரு தீர்கதரிசனமாக எண்ணிப்பார்த்து கடைப்பிடித்தும் வருகிறது. இதை இல்லை மூடநம்பிக்கை என்றெல்லாம் வாதிடுவதைவிட நாமும் சமூகத்துடன் சேர்ந்து நல்லவர்களாக வாழ பலகிக்கொள்வதே நன்மையாகும்