இலங்கையின் வடகிழக்கின் இன்னொரு அவலம்

எப்பிறவியில் செய்த பாவமோ தொடர்ந்து எம் சமூகம் ஒரே துன்பத்தில் துவண்டு கொண்டே வாழவேண்டி உள்ளது.

பல ஆண்டுகாலமாய் போரும், அவலமும், அகதி வாழ்வம், போதாதென்று சுனாமி எனும் ஆழிப்பேரலை அடித்து கொன்று தின்று விளுங்கிப்போனதுகூட காணாதென்று ' என்ன கொடுமை இன்று எப்படி வானம் இவர்கள் மீது இரக்கமற்று இப்படிக்கொட்டுது மழையை.

பார்க்கும் இடமெல்லாம் கடலாய் தெரிகிறது வீடு வாசல் வெள்ளக்காடு கரை அற்று கிடக்கும் கடலாக வாழ்விடங்கள். வாழ வழியின்றி எம்மினம்' எங்கே சொல்வது இறைவா இந்த கொடுமையை படைத்த கடவுளும் பார்க்காமல் போனதேனோ வடக்கில் சற்று குறைவென்றாலும் கிழக்கு என்பதையே காண முடியவில்லை' கடலாக தெரிகிறது. இன்னமும் விட்ட பாடில்லை பெய்துகொண்டிருக்கிறது. மீண்டும் அகதியாக மக்கள் அல்லல்ப்படும் கொடூரம் காணமுடியாத 'துயரம்' சிறுவர்,முதியோர்,பெண்கள்,ஆண்கள் என அனைவரும் பெரும் அல்லோலப்படும் நிலைமை பார்க்கமுடியாதுள்ளது. வயோதிபர்கள் இடம்பெயரமுடியாமல் தவிக்கும் தவிப்பு சொல்லில் அடக்கிட முடியாத சோகநிலை. இனியாவது இவர்களுக்கு நல்லது நடக்க இறைவா வழிவிடுவாயா???????????