வெள்ள அவலத்தில் தவிக்கிறது அம்பாறையும்

கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழையால் தற்போது அம்பாறை மாவட்டமும் பெரும் அழிவை சந்தித்துள்ளது. விடாது கொட்டும் அடைமழை பிரதேசம் முழுவதையும் மூழ்கடித்துள்ளது. மக்கள் வாழ்விடங்கள் குளங்கள் போல் காட்சி தருகின்றன. வீடுகள் கடல் கோட்டை போல் காண்கின்றன அவலத்தின் உற்சியில் வாழும் இவர்கள் உண்ணஉணவின்றியும் உடுக்க மாற்று உடையின்றியும் பெரிதும் தவிக்கிறார்கள். உதவி செய்ய மனம் உள்ளவர்களும், வசதி உள்ளவர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யவேண்டிய காலத்தில் உள்ளீர்கள். எனவே இக் காலத்து தேவை அறிந்து உடன் உதவுங்கள். கண்ணீரிலும் தண்ணீரிலும் வாழும் இந்த உறவுகளை இன மத பேதமின்றி அரவணைக்க அனைவரும் ஒன்றிணைவோம்.

[படங்கள் tw]