அனைத்து உண்மை வாசகர்களுக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.


மனித சமூகத்தின் வாழ்க்கைக்கு உறுதுணை நின்று எம் வாழ்வு வளம்பெற உதவி புரிந்த சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்க எமக்கு கிடைத்த ஒரு பெருநாள் இத் தைத்திருநாள் மனித வாழ்விக்கு தேவையான அனைத்து உற்பத்திகளையும் நாம் செய்திட எமக்கு துணை நிற்பவன் சூரியனே. அதனாலே உழவர்கள் தாம் விவசாய நடவடிக்கைகளை சீராக செய்து முடிக்க துணை நின்ற சூரிய தேவனை வாழ்த்தி வணங்கி நன்றி கூறும் இப் புனித நாள் தை முதல் நாள் நல்ல அறுவடை பெற்று அனைவரும் ஆரோக்கியமாக வாழவும் ஒருவரோடு ஒருவர் அன்பு நேசம் கொண்டு வாழவும் இனிப்பான சுவைகளை பரிமாறி இனிமையான வார்த்தைகள் பேசி சந்தோசத்துடன் அனைவரும் வாழவேண்டுமென வாழ்த்துகிறோம். நல்லதே நடந்து நன்மையே பெற்று நலம் பெற வேண்டுமென இவ் இனிய தைத்திருநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.