வித்தியாசமாக சிந்தனை செய்து அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து அதை மனித சமூக பயன்பாட்டுக்கு கொண்டுவருபவர்களே விஞ்ஞானிகள் என்றால் அது மிகையாகாது. இருப்பினும் அவ்வகையான செயல்களால் மனிதனுக்கு பெரும் தீங்கான செயல்கள் சிலவும் நடப்பதுண்டு. ஆனால் பெரும்பாலும் நன்மைகளே அதிகம் ஏற்படும் என்பதுதான் உண்மை. விண்வெளியில் பலசாதனை படைத்து வரும் வேளையில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துள்ளார் கலிபோர்னியாவின் பிரெயின் ஆய்வு மைய விஞ்ஞானி "றோவின்ஜோசப்' அண்மையில் "செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்" எனும் தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரயாற்றிய மேற்படி விஞ்ஞானி மனிதனுக்கு செக்ஸ் உணர்வு அதிகம் எனவே ஒரு ஜோடியை விண்வெளிக்கு அனுப்பி நீண்ட நாள் அவர்களை தனிமையில் விடவேண்டும் அப்போது அவர்களுக்கு உணர்வு ஏற்ப்படும் அதன் மூலம் உறவு கொள்வார்கள் அதன் மூலம் ஏற்ப்படும் குழந்தையை அங்கேயே பெற்று எடுக்க வேண்டும். இக்குழந்தை விண்வெளியில் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையை பெறும் என்று கருத்தை மிக ஆதங்கப்பட்டு தெருவித்திருந்தார். அத்தோடு "நாசா" விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பல சாதனை படைத்து வருகிறது. அதனால் இதையும் சாதிக்க முடியும் ஆனால் இது விடயத்தில் "நாசா" மௌனம் காத்து வருகிறது என்றும் குறிப்பட்டார். அனால் நாசாவோ இதை செய்ய தற்போது தயாராக இல்லை ஏனெனில் விண்வெளி விரர்களுக்கென்று சுயமரியாதை நற்பண்பு கௌரவம் என்பன உண்டு அதை கெடுத்துக்கொள்ள "நாசா" தற்போது தயாராக இல்லை ஆனாலும் ஆராட்சி என்ற மட்டில் காலப்போக்கில் சாத்தியப்படலாம்?