வாழும் வரை வாழ்ந்த நூல்

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான "சிரித்திரன்" எனும் நகச்சுவை சஞ்சிகை முதலில் 1964ம்ஆண்டு கொட்டாஞ்சேனை கொழும்பு 13இல் இருந்து யாழ் கரவட்டியைச் சேர்ந்த சிற்றம்பலம் சிவஞானசுந்தரம் அவர்கள் வெளியிட்டார். பின்பு 1971ம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணம் பிறவுண்வீதியில் இருந்து இச் சஞ்சிகையை வெளியிட்டுவந்தார். சிரிப்பதற்கு மட்டும் அன்றி சிந்திக்கக்கூடிய வகையிலேயே நகைச்சுவைகளை சிரித்திரன் மூலம் வெளியிட்டுவந்தார் சிவஞானசுந்தரம் அவர்கள். இதில் விசித்திரம் என்னவென்றால் இவர் இறக்கும் வரை இந்நூல் வெளிவந்துகொண்டே இருத்தது என்பதுதான். 1996மார்ச்மாதம்03திகதி இவர் இறைவன் அடி சேர்ந்தார்.