தந்திரோபாய அரசியலில் இந்திய மத்திய,மாநில அரசுகள் துணைபோன கடலோர காவல்ப்படை.

இந்திய மத்திய, மாநில அரசுகள் தேர்தல்களை நோக்காக கொண்டுதான் செயல்படுகின்றன என்பதற்கு நல்ல சான்று ஒன்று அண்மையில் தெரியவந்துள்ளது. அண்மையில் தமிழ்நாடு புதுக்கோட்டைக்கு வருகை தந்த இந்திய கடல் படையின் கிழக்கு கடல் பிராந்திய தளபதி [தலைவர்] பெநிவால் கடல்படை முகாங்களை பார்வையிட்டதோடு இனி இந்திய மற்றும் இலங்கை கடல் எல்லையில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடல் படை கொலை செய்வதை தடுக்கும் முகமாக எல்லையோர காவல்படையினர் இருபத்திநான்கு மணிநேரமும் ரோந்து பணியில் எடுபட உள்ளதாக தெரிவித்தார்.

நன்கு சிந்திக்க வேண்டிய விடயம் என்னவெனில் பலமீனவர்கள் தினம்தோறும் செத்துக்கொண்டு இருந்தபோது ஏன் இவர்கள் இதை செய்யவில்லை? ஏனெனில் அப்போது தேர்தல் நெருங்கவில்லை. இப்பொது இவர்கள் தமிழ்நாட்டில் ஏற்ப்பட்டிருக்கும் பலவாறான எளிர்ச்யைக்கண்டு பயப்பிடுகிராகள். அத்தோடு மீனவசமூகம் கண்ட இந்த இழப்பே இவர்களுக்கு எதிரான எளிர்சிக்கு மூல காரணமாக அமைந்துவிட்டதால் தமிழக தமிழர்களை காப்பாற்ற தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக காட்டி தமிழக வாக்குகளை தமக்கு சாதகமாக்க மத்திய மாநில அரசுகள் திட்டம் போட்டன அதற்காக கடல்படையை தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.

எவ்வளவோ கொடூரங்களை தமிழக மீனவர்கள் எதிர்கொண்டபோது கடல்படை ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவில்லை? செத்தவர்கள் தமிழர்தானே என்று இருந்தவர்கள் இப்போது கருசனை காட்டுவது ஏன்? ஓவரு தமிலகமீனவனும் செத்து மடியும் போதும் எதிர்ப்புக்காட்டும் தமிழர்களை எல்லாம் கைது செய்வதிலும், தனக்கு எதிராக தமிழ்நாட்டில் மூன்றாம் தரப்பு அரசியல் சக்தி உருவாகாமல் தடுப்பதற்கும் இவ் இழப்புகளை சாதகமாக தமிழ்நாட்டு அரசியல் தலைமை மேற்கொண்டது. இழப்புகளை தடுப்பதற்கோ உணர்வுகளை புரிந்துகொள்ளவோ அவர்கள் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் அப்போது எடுக்கவில்லை.

இது இவ்வாறு இருக்க மத்திய அரசோ மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று நொண்டி சாட்டுகளை சொல்லிக்கொண்டு இருந்தது. அந்த வேளையில் இவ்வாறான நடவடிக்கை எடுத்திருப்பின் ஒரு சில உயிர்களையாவது காப்பாற்றி இருந்திருக்கலாம். அத்தோடு மக்களின் மனங்களிலும் ஒரு ஆறுதலை ஏற்ப்படுத்தி இருக்கலாம். தமிழர்களை புறக்கணித்தமைக்கும், உலகறிந்த இவர்களின் ஊழலிக்கும் தமிழக வாக்குகள் பாடம் புகட்டுமா? மானம் காப்போமா? ..............இலவசமாவோமா?..............